எம்.ஜி.ஆர் காட்டிய பாதையில் எந்நாளும் பயணித்திட இந்நாளில் உறுதியேற்போம் - டிடிவி தினகரன்

எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி டிடிவி தினகரன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.;

Update:2025-12-24 09:51 IST

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் இதயக்கனியாக, ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கும் கொடை வள்ளலாக, உலகமெங்கும் வாழும் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக, மக்கள் செல்வாக்கை மாபெரும் அரசியல் சக்தியாக மாற்றிய பொன்மனச் செம்மல் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் இன்று.

தமிழகத்தின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்து, எண்ணிலடங்கா மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தியதோடு, தனது பேச்சாற்றலாலும், அறிவாற்றலாலும் தமிழகத்தைத் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்றிக் காட்டிய மூன்றெழுத்து மந்திரம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் காட்டிய பாதையில் எந்நாளும் பயணித்திட இந்நாளில் உறுதியேற்போம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்