பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட்ட பியூஷ் கோயல்
பிரதமர் மோடி வருகையையொட்டி 3 நாட்கள் டிரோன் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. அதற்காக தயாராகும் தீவிர அரசியல் பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இதனையொட்டி, பிரதமர் மோடி நாளை மறுநாள் தமிழகம் வருகிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் வரும் 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மிகப்பெரிய அளவில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு கூட்டணி கட்சி தலைவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றுவார். பொதுக்கூட்டத்திற்கான மேடை, பந்தல், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடி வருகையால் மீனம்பாக்கம் மற்றும் கிண்டி ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலம் என அறிவிக்கப்பட்டு உள்ளன. அதனால், டிரோன் கேமராக்கள், ஆளில்லா விமானங்கள், ஹீலியம் காற்று பலூன்கள் போன்றவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மதுராந்தகத்தில் நாளை மறுநாள் பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை மத்திய மந்திரி பியூஷ் கோயல் நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் மத்திய இணை மந்திரி எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். பொதுக்கூட்ட ஏற்பாடுகளை விரைந்து முடிக்கி பியூஷ் கோயல் அறிவுறுத்தினார்.