தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவு

தைவானில் ரிக்டர் 6.9 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;

Update:2025-06-11 17:34 IST

தைபே,

தைவானின் கிழக்கு கடற்கரையில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தைவானில் ரிக்டர் 6.9 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 30.9 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால் தைபே தலைநகரில் கட்டிடங்கள் சுமார் ஒரு நிமிடம் குலுங்கின. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாக வில்லை.

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் தைவானில் சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்