தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்: மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி புகார்
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கில் நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.;
மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தூத்துக்குடி மாநகரக் குழு செயலாளர் முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கில் நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். மாவட்ட தலைநகரில் உள்ளதால் அரசு மருத்துவமனைக்கு மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்காக வருகின்றனர். நோயாளிகளை கவனித்துக்கொள்ள குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்களும் வருகின்றனர். இவ்வாறு அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
அரசு மருத்துவமனைகளை சுகாதாரமாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துரை அமைச்சர் அறிவுத்தியுள்ளார். அப்படி இருக்க தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் உறவினர்களும் வேறு ஒரு நோயோடு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அதாவது அரசு மருத்துவமனை வளாகத்தில் சாக்கடை கழிவு நீர் தொட்டி நிரம்பியும் உடைந்தும் சாக்கடை நீர் வெளியேறி குட்டை போல் காட்சியளிக்கிறது. எனவே மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக இந்த விசயத்தில் தலையிட்டு சாக்கடை நீர் மருத்துவமனை வளாகத்தில் குட்டை போல் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.