எஸ்.ஐ. தேர்வு தொடர்பான வழக்கு - சீருடை பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்க கோர்ட்டு உத்தரவு
எஸ்.ஐ. தேர்வு தொடர்பான வழக்கில் சீருடை பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
கோப்புப்படம்
மதுரை,
கடந்த 2024-ம் ஆண்டு காவல்துறை எஸ்.ஐ. பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக அந்த தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 4-ந்தேதி மீண்டும் எஸ்.ஐ. தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் சில தேர்வர்கள் வயது வரம்பால் வாய்ப்பை இழக்கின்றனர். இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், வழக்கு தொடர்பாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.