66 கிலோ புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது; பைக் பறிமுதல்

நெல்லை டவுண் தெற்கு மவுண்ட் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திரையரங்கம் அருகே டவுண் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ரோகினி செல்வி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.;

Update:2026-01-28 08:04 IST

திருநெல்வேலி மாநகரம் டவுண் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு மவுண்ட் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திரையரங்கம் அருகே நேற்று டவுண் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ரோகினி செல்வி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த பேட்டை கோடீஸ்வரன் நகரை சேர்ந்த பிரம்மநாயகம் மகன் நெல்லை ராஜ் (வயது 46) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அவரது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.56 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 66 கிலோ கிராம் எடையுள்ள, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் அதற்கு பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், நெல்லை ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்