சிறார்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை கோரி மனு - விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்க முயன்றபோது என்ன நடந்தது தெரியுமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.;
புதுடெல்லி,
இந்தியாவில் 14 முதல் 18 வயது வரை உள்ள சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் சில ஐரோப்பிய நாடுகள் மற்றும் அரபு நாடுகளை போல் இந்தியாவிலும் சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது. நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்க முயன்றபோது என்ன நடந்தது தெரியுமா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சிறார்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.