கோவை: ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மாகாளியம்மனுக்கு வெள்ளி கவசம் சாற்றி அலங்கார மஹா தீபாராதனை நடைபெற்றது.;

Update:2025-11-03 16:17 IST

கோவை மாவட்டம், சோமனூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த சனிக்கிழமை காலை மங்கள இசை, மஹா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. அன்று மாலை விநாயகர் பூஜையுடன் முதற்கால யாக பூஜை தொடங்கியது.

நேற்று காலை 2-ம் கால யாக பூஜையும் மாலை 3-ம் கால யாக பூஜையும் நடைபெற்றது. இன்று காலை 4-ம் கால யாக பூஜையும், தொடர்ந்து கலசங்கள் புறப்படும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முதலில் மங்கள விநாயகர், மாகாளியம்மன் ஆலய கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆலய வளாகத்தில் உள்ள பேச்சியம்மன், திரிசூலி அம்மன், ராகு -கேது, கருப்பராய சுவாமி, இடைச்சியம்மன், குதிரை வாகனம், எல்லையம்மன், வெள்ளையம்மன், பள்ளத்து கருப்பராய சுவாமி ஆகிய சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு வெள்ளி கவசம் சாற்றி அலங்கார மஹா தீபாராதனை நடைபெற்றது. இதில் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் கோவில் வளாகத்தில் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்