வட்டமலைக்கரை ஓடை நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு- தமிழக அரசு

வட்டமலைக்கரை ஓடை நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.;

Update:2025-02-13 17:19 IST

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், வட்டமலைக்கரை ஓடை நீர்த்தேக்கப் பாசனப் பகுதிகளிலுள்ள பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், வட்டமலைக்கரை ஓடை நீர்த்தேக்கத்தின் இடது மற்றும் வலது பிரதானக் கால்வாய் வழியாக, நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றும் பொருட்டும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைகளுக்காகவும் நாளை(14.02.2025) முதல் 06.03.2025 வரையிலான 20 நாட்களில் உரிய இடைவெளிவிட்டு, 8 நாட்களுக்கு 55.30 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட) வட்டமலைக்கரை ஓடை நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால், திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டத்திலுள்ள 6043 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்