இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 14-12-2024

Update:2024-12-14 08:10 IST
Live Updates - Page 3
2024-12-14 09:11 GMT

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024-12-14 09:10 GMT

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் தாயகம் திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் - டி.டி.வி. தினகரன்

2024-12-14 07:50 GMT

செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, அடையாற்றின் கரையோரம் வசிப்பவர்கள் மற்றும் புழல் ஏரியின் உபரி நீர் செல்லும் கால்வாயின் அருகில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

2024-12-14 07:06 GMT

பிரிஸ்பேன் டெஸ்ட்: 13-வது ஓவரில் குறுக்கிட்ட மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் இன்று நடைபெற்றது. ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. 13-வது ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. தொடர் மழையால் மைதானத்தில் அனைத்து பகுதிகளிலும் மழை நீர் தேங்கியதால் போட்டியை மீண்டும் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே முதல் நாள் ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக நடுவர்கள் அறிவித்தனர்.  

2024-12-14 07:05 GMT

நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி


Tags:    

மேலும் செய்திகள்