புழல் ஏரியில் தண்ணீர் திறப்பு - தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

ஆபத்தை உணராமல் பொதுமக்கள் தண்ணீரில் இறங்கி நடந்தபடி தரைப்பாலத்தை கடந்து செல்கின்றனர்.;

Update:2025-12-04 19:42 IST

சென்னை,

கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் புழல் ஏரியில் இருந்து 2,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. மணலி, சடையங்குப்பம், பர்மா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே மழைநீர் வடியாமல் தேங்கி நின்ற நிலையில், தற்போது ஏரியில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது.

இந்த நிலையில் சடையங்குப்பம் பகுதியில் உள்ள தரைப்பாலம் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியது. இருப்பினும் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் தண்ணீரில் இறங்கி நடந்தபடி தரைப்பாலத்தை கடந்து செல்கின்றனர். தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 


Tags:    

மேலும் செய்திகள்