அனைவருக்கும் நம்பிக்கை நிறைந்த குடியரசு தின வாழ்த்துகள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது;

Update:2025-01-26 12:50 IST

சென்னை,

நாட்டின் 76-வது குடியரசு தினவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது..தமிழக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் கவர்னர் ஆர்.என்.ரவி 4வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து வைத்தார். அந்த நேரத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. தொடர்ந்து கவர்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், முப்படையை சேர்ந்த அதிகாரிகள், அரசு மற்றும் போலீஸ்துறை உயர் அதிகாரிகள் மற்றும் மக்கள் என பலரும் தேசியக்கொடிக்கு 'சல்யூட்' செய்தபடி நின்றனர். குடியரசு நாள் விழா மேடையில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஸ்ரீராம், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.அதனை தொடர்ந்து வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

இந்த 76வது குடியரசு தினத்தில், அனைவருக்கும் நீதி, சமத்துவம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்யும் நமது அரசியலமைப்பின் அடித்தளத்தை போற்றுவோம். முற்போக்கான, உள்ளடக்கிய மற்றும் இரக்கமுள்ள இந்தியாவை உருவாக்குவதற்கான நமது பகிரப்பட்ட கடமையை இந்த நாள் நமக்கு நினைவூட்டட்டும்.

அனைவருக்கும் நம்பிக்கையும் நோக்கமும் நிறைந்த குடியரசு தின வாழ்த்துகள்.என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்