கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை முயற்சி - மருத்துவமனையில் அனுமதி

கத்திப்பாரா மேம்பாலத்தில் 35 அடி உயரத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2025-07-31 19:33 IST

கோப்புப்படம் 

சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (22 வயது). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியேறிய பாலாஜி, கத்திப்பாரா மேம்பாலத்தில் விமான நிலையம் நோக்கி செல்லும் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். திடீரென பாலாஜி, சுமார் 35 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து விட்டார். கிண்டி செல்லும் சர்வீஸ் சாலையில் விழுந்த அவருக்கு இடுப்பு உடைந்து படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார்.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த பரங்கிமலை போலீசார், பாலாஜியை மீட்டு கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியின் தற்கொலை முயற்சிக்கு காரணம் காதல் விவகாரமா? அல்லது வேறு ஏதுமா? என விசாரித்து வருகின்றனர்.

கடந்த 23-ந்தேதி தியாகராய நகரைச் சேர்ந்த மனோஜ் என்பவரும் இதே கத்திப்பாரா பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதில் தலையில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்