தூத்துக்குடியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ஆத்தூரைச் சேர்ந்த வாலிபருக்கும், குரும்பூரைச் சேர்ந்த பெண்ணுக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது.;
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே ஆவரையூரைச் சேர்ந்த தேவேந்திரன் மகன் கவியரசன் (வயது 33). தொழிலாளியான இவருக்கும் குரும்பூர் அருகே அம்மன்புரத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து மகள் சுகன்யாவுக்கும்(27) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
கவியரசன் வேலைக்குச் செல்லாமல் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்ததாகவும், இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 16ம்தேதி சுகன்யா வீட்டில் யாருமில்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பேச்சிமுத்து அளித்த புகாரின் பேரில், ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகன்யா தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.