உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி

வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளனது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;

Update:2025-11-15 12:43 IST

சென்னை,

இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காலை 8.30 மணியளவில் உருவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளனது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்