தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
தென்மேற்கு வங்கக் கடல், குமரிக்கடல், இலங்கைப் பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.;
சென்னை,
தென்குமரிக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனிடையே கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தென்மேற்கு வங்கக் கடல், குமரிக்கடல், இலங்கைப் பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு-வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து, வரும் 27-ந்தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் புயலாக வலுவடைய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.