ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; மீனவர்கள் நாளைக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் - வானிலை மையம் எச்சரிக்கை

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.;

Update:2025-11-23 13:21 IST

சென்னை,

தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி தெற்கு அந்தமான் கடலில் நேற்று (நவ.22) உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அதே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது என்றும், இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து, அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வங்கக்கடலில் உள்ள மீனவர்கள் நாளைக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்ற நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்