வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.;
சென்னை,
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இலங்கையை நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னைக்கு தெற்கு தென்கிழக்கில், 490 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.
மணிக்கு 6 கி. மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டனம், வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு இலங்கையில் திரிகோணமலை - யாழ்ப்பாணம் இடையே, இன்று மாலை கரையை கடக்கக்கூடும். தமிழகத்தை பொறுத்தவரை, கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலுார் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில், இன்று மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.