சென்னை உள்பட 8 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு...!

கேரள கடலோரப்பகுதிகள் வரை ஒரு கிழக்கு வளிமண்டல காற்றலை நிலவுகிறது.;

Update:2026-01-25 22:40 IST

குமரிக்கடல் பகுதிகளில் இருந்து வடக்கு கேரள கடலோரப்பகுதிகள் வரை ஒரு கிழக்கு வளிமண்டல காற்றலை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னை உள்பட 8 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

ராணிப்பேட்டை, வேலூர், நாகை, திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் நள்ளிரவு 1 மணிவரை லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்