வடக்கு சிரியாவில் கார் குண்டு வெடிப்பில் 15 பேர் பலி

வடக்கு சிரியாவில் கார் குண்டு வெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.;

Update:2025-02-03 15:19 IST

டமாஸ்கஸ்,

வடக்கு சிரியாவின் மன்பிஜ் நகரின் புறநகர் பகுதி அருகே விவசாய தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனத்தின் அருகே இருந்த காரில் குண்டு வெடித்தது. இதில் 14 பெண்கள் உள்பட 15 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் சிவில் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், இந்த குண்டு வெடிப்பில் 15 பெண்கள் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்