ஆபரேஷன் சிந்து: ஈரானில் இருந்து மேலும் 256 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு
ஈரான் மற்றும் இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க கடந்த புதன் கிழமை ‘ஆபரேஷன் சிந்து’ எனும் நடவடிக்கையை இந்தியா தொடங்கியது.;
புதுடெல்லி,
ஈரான்-இஸ்ரேல் இடையே ஒரு வாரத்துக்கும் மேலாக கடுமை யான மோதல் நடைபெற்று வரு கிறது. இரு நாடுகளும் ஏவுகணை கள், டிரோன்கள் என வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இஸ்ரேலின் தாக்குதலை தடுக்கும் விதமாக வான்வெளி யில் பல கட்டுப்பாடுகளை ஈரான் விதித்துள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர் களை மீட்க கடந்த புதன் கிழமை 'ஆபரேஷன் சிந்து' எனும் நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. இந்த நடவடிக்கையின் கீழ் முதல் கட்டமாக 110 இந்தியர்கள் ஈரானில் இருந்து மீட்கப்பட்டனர். இவர்கள் வியாழக்கிழமை அதிகாலை புது டெல்லியை வந்தடைந்தனர். இந்நிலையில், அடுத்தகட்டமாக இந்திய மாணவர்கள், குடிமக்கள் உள்பட 1,000 பேரை பாதுகாப் பாக இந்தியாவுக்கு அனுப்ப வான் வெளி கட்டுப்பாடுகளில் சில தளர் வுகளை மேற்கொண்டுள்ளதாக ஈரான் துணைத் தூதர் முகமது ஜாவித் ஹூசைனி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ஈரான் தலைநகர் டெஹ் ரான் மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதல் நடத்த தொடங்கியவுடன் அங்கிருந்து மஷாத் நகருக்கு இந்தியர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். தற்போது மஷாத் நகரில் இருந்து ஈரானிய விமான நிறுவனமான மகான் மூலம் இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பவுள்ளனர். இதற்காக மூன்று விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முதல் விமானம் நேற்று நள்ளிரவு வந்தடைந்தது. மற்ற இரண்டு விமானங்கள் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் இந்தியா வந்தடையும் என்று அதிகரிகள் தெரிவித்தனர். அந்த வகையி இன்று ஈரானில் இருந்து மேலும் 256 மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியை சேர்ந்தவர்கள்.