முதுகுவலியுடன் வயிற்று வலியும் வந்ததுதான் மிச்சம்... 8 தவளைகளை உயிருடன் விழுங்கிய மூதாட்டியின் வேதனை

அவருக்கு நடந்த பரிசோதனையில் உயிருள்ள தவளைகளை விழுங்கியதில் ஜாங்கிற்கு உணவு செரிக்கும் வயிற்று பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.;

Update:2025-10-09 21:27 IST

பீஜிங்.

சீனாவின் ஜெஜியாங் மாகாணம் ஹாங்சோ பகுதியை சேர்ந்த பெண் ஜாங் (வயது 82). முதுகுவலியால் அவதிபட்டு வந்த அவரிடம், தவளைகளை உயிருடன் விழுங்கினால் முதுகுவலி சரியாகும் என்று உறவினர்கள் சிலர் தெரிவித்துள்ளார்.

இதனை உண்மை என்று நம்பிய ஜாங் தனது குடும்பத்தினரிடம் தவளைகளை பிடித்து வரும்படி கூறினார். அவர்களும் 8 சிறிய தவளைகளை பிடித்து வந்தனர். ஜாங் முதலில் 3 தவளைகளை விழுங்கினார். அடுத்த நாள் 5 தவளைகளை விழுங்கினார். அதன்பின் அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.

அவருக்கு இருந்த முதுகுவலியை விட வயிற்று வலி அதிகரித்ததும் வலியால் முனகினார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். அவருக்கு நடந்த பரிசோதனையில் உயிருள்ள தவளைகளை விழுங்கியதில் ஜாங்கிற்கு உணவு செரிக்கும் வயிற்று பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. உடலில் சில ஒட்டுண்ணிகளும் இருந்துள்ளன.

எவரோ கூறினார்கள் என நம்பி, உயிருள்ள தவளைகளை விழுங்கிய அந்த பெண்ணுக்கு முதுகுவலியுடன் வயிற்று வலியும் சேர்ந்து கொண்டது. உடல் பாதிப்புகளும் கூடின. அவற்றை கண்டறிந்த டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்