1,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அமேசான்

இணைய வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமாக அமேசான் திகழ்கிறது.;

Update:2025-01-24 06:50 IST

ஒட்டாவா,

கொரோனா தொற்றின்போது உலகம் முழுவதும் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. உலகின் முன்னணி நிறுவனங்கள் கூட இதனை சமாளிக்க முடியாமல் திணறின. எனவே சம்பளம் குறைப்பு, ஊழியர்கள் பணி நீக்கம் போன்ற நடவடிக்கைகளை நிறுவனங்கள் எடுத்து வருகின்றன.

இணைய வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமான அமேசானுக்கு உலகம் முழுவதும் பல கிளை அலுவலகங்கள் அமைந்துள்ளன. ஆனால் கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள பல கிளைகள் நட்டத்தில் இயங்கி வருகின்றன. எனவே அங்குள்ள 7 அலுவலங்களை மூடுவதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு வேலை பார்த்து வரும் 1,700 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்