ஆல்ப்ஸ் மலையில் பனிச்சரிவு - சுற்றுலா பயணி உயிரிழப்பு
பனிச்சரிவில் சிக்கி 27 வயது வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்.;
பாரிஸ்,
பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலை பிரபல சுற்றுலா தலம் ஆகும். இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலையின் அழகை கண்டு ரசிக்க வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் அங்கு சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது திடீரென அங்கு பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் சிக்கி 27 வயது வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்.