‘நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் கொல்லப்படவில்லை’ - டிரம்ப் குற்றச்சாட்டு குறித்து ஆப்பிரிக்க ஒன்றியம் விளக்கம்

கிளர்ச்சியாளர்களால் அதிக அளவில் இஸ்லாமியர்கள்தான் கொல்லப்படுவதாக ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.;

Update:2025-11-13 19:58 IST

நைஜர்,

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் கிளச்சியாளர்களால் கொலை செய்யப்படுவதாகவும், அந்நாட்டின் மீது அமெரிக்க ராணுவம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில், டிரம்ப்பின் குற்றச்சாட்டுக்கு ஆப்பிரிக்க ஒன்றியம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவர் முகமது அலி யூசுப், சூடான், காங்கோவைப் போல் நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படவில்லை என விளக்கமளித்தார். அதே சமயம், கிளர்ச்சியாளர்களால் அதிக அளவில் இஸ்லாமியர்கள்தான் கொல்லப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்