தொழில்நுட்ப கோளாறு: டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் துபாயில் தரையிறக்கம்

விமானத்தில் 150க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.;

Update:2025-10-10 11:57 IST

துபாய்,

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் இருந்து நேற்று இரவு இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானத்தில் 150க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.

விமானம் ஐக்கிய அரபு அமீரகத்தின் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது அதில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து விமானம் உடனடியாக துபாய் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதையடுத்து, விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர் இன்று காலை துபாயில் இருந்து டெல்லி புறப்பட்டது. தொழில்நுட்ப கோளாறால் விமான பயணம் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.   

Tags:    

மேலும் செய்திகள்