பார்வையாளர்களை கவர்ந்த நாய் சர்பிங் போட்டி

நாய்களுக்கான சர்பிங் போட்டியை பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர்;

Update:2025-09-09 00:02 IST

கலிபோர்னியா ,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நாய்களுக்கென நடத்தப்பட்ட அலைச்சறுக்கு (சர்பிங்) போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

விலங்குகள் தங்கும் இடத்திற்கான நிதியை திரட்டும் வகையில் 20-வது வருடாந்திர நாய் அலைச்சறுக்கு போட்டி கலிபோர்னியாவில் உள்ள கடற்கரையில் நடைபெற்றது. பல்வேறு இனங்கள் மற்றும் உயரத்தின் அடிப்படையில் நாய்கள் வகைப்படுத்தப்பட்டு போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டன.

பிரத்தியேக சர்பிங் பலகையில் ஒன்று மற்றும் அதற்கு மேற்பட்ட நாய்கள் அமர்ந்தபடி கடல் அலையில் மிதந்து இலக்கை எட்டி மீண்டும் கடற்கரைக்கு திரும்பின, இதனை பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்