மாலத்தீவுக்கு ரூ.4,850 கோடி கடன் வழங்குவதாக இந்தியா அறிவிப்பு

இந்தியா-மாலத்தீவு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.;

Update:2025-07-25 21:39 IST

மாலி,

பிரதமர் மோடி இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு தனி விமானம் மூலம் மாலத்தீவு புறப்பட்டார். 2 நாட்கள் பயணமாக மாலத்தீவு சென்றுள்ள பிரதமர் மோடியை அந்நாட்டின் அதிபர் முகமது முய்சு விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.

தொடர்ந்து இருநாட்டு தலைவர்களும் இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். நாளை நடைபெறும் மாலத்தீவின் 60-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

இதனிடையே, மாலத்தீவுக்கு இந்தியா ரூ.4,850 கோடி கடன் வழங்க உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும், இந்தியா-மாலத்தீவு இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு இருநாட்டு அரசுகளும் முயற்சி செய்யும் என்றும், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்