நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு

ஊழியர்களின் பணிநீக்க எதிரொலியால் அமெரிக்காவின் எதிர்கால ஆராய்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.;

Update:2025-07-13 12:25 IST

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செலவுகளை குறைக்க பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், தற்போது அடுத்த கட்டமாக, நாசாவில் உயர் பொறுப்பில் இருக்கும் 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்க அரசாங்க வட்டாரங்களில் இருந்து வெளியான தகவலின்படி, 2,145 பேரை பணிநீக்கம் செய்யப் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த அதிரடி முடிவு ஊழியர்கள் மத்தியில் ஒரு பக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்னொரு பக்கம் அமெரிக்காவின் எதிர்கால ஆராய்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக, 2026 ஆம் ஆண்டு நிலாவுக்கும்,செவ்வாய் கிரகத்திற்கும் மனிதர்களை அனுப்ப நாசா  திட்டமிட்டுள்ள நிலையில், இந்த பணிநீக்கத்தால் அந்த பணிகள் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்