செல்போனில் மட்டுமில்லை..இனி டிவியிலும் இன்ஸ்டா ரீல்ஸ்.. மெட்டா கொடுத்த அப்டேட்

இனி டிவிக்களிலும் ரீல்ஸ்களை பார்க்கும் வசதியை கொண்டு வர இருப்பதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.;

Update:2025-12-18 12:11 IST

representation image (Grok AI)

இன்ஸ்டகிராம் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பேர் பயன்படுத்தும் செயலியாக உள்ளது. இந்தியாவில் மட்டும் இன்ஸ்டகிராம் செயலியை சுமார் 48 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள். இன்ஸ்டகிராம் செயலியில் துவக்கத்தில் புகைப்படம் மட்டுமே அப்டேட் செய்ய முடியும் என்ற நிலை இருந்த நிலையில், குறுகிய வீடியோக்களை அப்லோடு செய்து வசதியும் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் டிக்டாக் தடைக்கு பிறகு இன்ஸ்டா ரீல்ஸ் நெட்டிசன்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதிலும் இப்போதைய 2 கே கிட்ஸ்கல் குனிந்த தலை நிமிராமல் செல்போனில் ரீல்ஸ்களையே பார்த்துக்கொண்டு இருப்பதையும் பார்க்க முடிகிறது. அதிக லைக்ஸ்களை பெற விதவிதமான ரீல்ஸ்களையும் பதிவிட்டு வருகிறார்கள். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் இன்ஸ்டா ரீல்ஸ்களை பார்த்து வரும் நிலையில், இனி டிவிக்களிலும் ரீல்ஸ்களை பார்க்கும் வசதியை கொண்டு வர இருப்பதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக அமெரிக்காவில் அறிமுகம் செய்ய Amazon fire TV-ஸ்ட்ரீமிங் தளத்தில் சோதிக்கப்பட்டுவருவதாக மெட்டா நிறுவனர் மார்க் சூகர்பெர்க் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்