வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இஸ்ரேல் பயணம்; நெதன்யாகுவுடன் சந்திப்பு

2 நாட்கள் அரசு முறை பயணமாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இஸ்ரேல் சென்றுள்ளார்.;

Update:2025-12-17 10:22 IST

ஜெருசலேம்,

2 நாட்கள் அரசு முறை பயணமாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று இஸ்ரேல் சென்றுள்ளார். தலைநகர் ஜெருசலேம் சென்ற ஜெய்சங்கர் இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கை சந்தித்தார். மேலும், இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி கில்டான் சார், தொழில்துறை மந்திரி நிர் பர்கட்டை ஜெய்சங்கர் சந்தித்தார்.

இந்நிலையில், ஜெய்சங்கர் நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, பாதுகாப்பு , வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். அதேவேளை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்