பஹ்ரைனில் விஜய் மக்கள் இயக்கத்துடன் இணைந்து ரத்த தானம் செய்த த.வெ.க.வினர்

பஹ்ரைன் 54-வது தேசிய தினத்தை முன்னிட்டு, விஜய் மக்கள் இயக்கத்துடன் இணைந்து த.வெ.க.வினர் ரத்த தானம் செய்தனர்.;

Update:2025-12-17 12:38 IST

பஹ்ரைன்,

மேற்கு ஆசிய தீவு நாடான பஹ்ரைனின் 54 -வது தேசிய தினத்தை முன்னிட்டு, அங்குள்ள சல்மானிய மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் விஜய் மக்கள் இயக்கமும், தமிழக வெற்றிக் கழகமும் இணைந்து நடத்திய மாபெரும் ரத்த தான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மக்கள் விரும்பும் முதல்-அமைச்சர் வேட்பாளர், தலைவர் விஜய் அவர்களின் வாழ்த்துக்களுடன், கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பஹ்ரைன் 54 வது தேசிய தினத்தை முன்னிட்டு சல்மானிய மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் விஜய் மக்கள் இயக்கமும், தமிழக வெற்றிக் கழகமும் இணைந்து நடத்திய மாபெரும் ரத்த தான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தார்கள், அவர்கள் அனைவருக்கும் பஹ்ரைன் விஜய் மக்கள் இயக்கம் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நெஞ்சார நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.

உதிரம் கொடுப்போம்!

உயிர் காப்போம்!!

தமிழக வெற்றிக் கழகம் - பஹ்ரைன்

பஹ்ரைன் விஜய் மக்கள் இயக்கம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்