அர்ஜென்டினா அருகே பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.;

Update:2025-05-02 19:17 IST

புவெனஸ் ஐரிஸ்,

அர்ஜென்டினா அருகே இன்று மாலை 6.28 மணியளவில் பயங்கர (இந்திய நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவானது.

தென் அமெரிக்க நாடான சிலி மற்றும் அர்ஜென்டினா தெற்கே 258 கி.மீ. தொலைவில் உள்ள கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீட்டைவிட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

இதனையடுத்து அந்நாட்டிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்