பப்புவா நியூ கினியா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.6 ஆக பதிவு
பப்புவா நியூ கினியா தீவின் லே நகரில் இருந்து மேற்கே 26 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.;
லே,
பப்புவா நியூ கினியா தீவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி இருந்தது. இதுபற்றி அமெரிக்க புவியியல் அமைப்பு முதலில் வெளியிட்ட செய்தியில், ரிக்டரில் 6.7 ஆக பதிவானது என தெரிவிக்கப்பட்டு, பின்னர் அது 6.6 ஆக திருத்தி அறிவிக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கம் 99.4 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. லே நகரில் இருந்து மேற்கே 26 கி.மீ. தொலைவில் உணரப்பட்டது. இது அந்நாட்டின் மொரோப் மாகாணத்தின் கடலோர தலைநகர் ஆகும்.
அந்நாட்டின் 2-வது மிக பெரிய நகரான இதில், 76 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.