பிரிட்டன் இளவரசர் ஹாரியை நாடு கடத்தும் திட்டம் இல்லை: டிரம்ப்

பிரிட்டன் இளவரசர் ஹாரியை நாடு கடத்தும் திட்டம் இல்லை அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.;

Update:2025-02-09 15:18 IST

வாஷிங்டன்,

பிரிட்டன் இளவரசர் ஹாரி, மனைவி மேகனுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். ஹாரியையும், முன்னாள் அதிபர் ஜோ பைடன் அரசையும் டிரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார். தற்போது அதிபராகி உள்ள டிரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றி வருகிறார்.

இந்நிலையில், இளவரசர் ஹாரி அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுவாரா என்பது தொடர்பாக அமெரிக்க நாளிதழுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் விளக்கமளித்துள்ளார். டிரம்ப் கூறும் போது, " ஹாரியை நாடு கடத்த நான் விரும்பவில்லை. அவரை தனியாக விட்டு விடலாம். மனைவியுடன் அவருக்கு நிறைய பிரச்னைகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்