நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு கட்டாய ராணுவ சேவை - இங்கிலாந்து பிரதமர்

இங்கிலாந்தில் ஜூலை 4-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

Update: 2024-05-26 20:20 GMT

கோப்புப்படம்

லண்டன்,

இங்கிலாந்தில் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்திய வம்சாவளியான இவரது பதவிக்காலம் முடிய உள்ளதால் வருகிற ஜூலை 4-ந் தேதி அங்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு அங்கு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தநிலையில் பிரதமர் ரிஷி சுனக் கூறுகையில், அடுத்த முறை கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு கட்டாய ராணுவ சேவையை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளார். அதன்படி நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களும் ஒரு ஆண்டு முழுநேர ராணுவம் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்