2 நாட்கள் அரசுமுறை பயணம்: அபுதாபி பட்டத்து இளவரசர் 9-ம் தேதி இந்தியா வருகை

2 நாட்கள் அரசு முறைப்பயணமாக அபுதாபி பட்டத்து இளவரசர் வரும் திங்கள் கிழமை இந்தியா வருகை தருகிறார்.;

Update:2024-09-07 19:23 IST

அபுதாபி,

2 நாட்கள் அரசுமுறை பயணமாக அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் நாளை மறுநாள் (திங்கள் கிழமை) இந்தியா வருகிறார். அங்கு அவர் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடியை நாளை மறுநாள் சந்தித்து பேசுகிறார். பிரதமர் மோடி அழைப்பின்பேரில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.

அபுதாபி பட்டத்து இளவரசராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக ஷேக் காலித் பின் முகம்மது பின் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். அவருடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய மந்திரிகளும், தொழில் அதிபர்கள் குழுவும் இந்தியாவுக்கு வருகை தர உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்