யானைகளை கொல்ல ஜிம்பாப்வே அரசு முடிவு!

யானைகளின் தொகையை கட்டுப்படுத்த ஜிம்பாப்வே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என தெரிவித்துள்ளது.;

Update:2025-06-06 09:50 IST

ஹராரே,

போட்ஸ்வானா நாட்டில் அதிக எண்ணிக்கையில் யானைகள் உள்ளன. ஆப்பிரிக்காவில் உள்ள சவன்னா யானைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு போட்ஸ்வானாவில் வாழ்கின்றன. அதேபோல போட்ஸ்வானாவிற்குப் பிறகு உலகின் இரண்டாவது பெரிய யானை எண்ணிக்கையை ஜிம்பாப்வே கொண்டுள்ளது.

ஜிம்பாப்வேயில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து, சுமார் 50 யானைகளை கொன்று அவற்றின் மாமிசத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்க அரசு முடிவு செய்துள்ளது. சுமார் 800 யானைகள் வசிக்க வேண்டிய இடத்தில் 2,550 யானைகள் வசிப்பதால் மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை என அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் யானைகளில் இருந்து வெட்டப்படும் தந்தங்களை அரசு பாதுகாக்கும் எனவும் தெரிவித்துள்ளது. உணவுக்காக யானைகளை வேட்டையாடும் நடவடிக்கை உலகளவில் கடுமையான விமர்சனங்களை ஈர்த்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்