நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்களிக்க கோரி நூதன முறையில் வலைதளங்களில் பிரசாரம்

திருமண அழைப்பிதழ் தமிழர்களின் ஒரு மரபாக இருந்து வருகிறது.

Update: 2024-04-18 12:05 GMT

சென்னை.

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் நாளை 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 100% வாக்காளர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு வகையில் தேர்தல் ஆணையம் தொடர்ந்து பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.

இதேபோல் சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகம் சார்ந்த அமைப்புகள் ஓட்டுக்கு பணம் வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டுவது, வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழக கலாச்சாரத்தில் ஒன்றான திருமண பந்தம் என்பது மிகவும் முக்கியமானதாகும். இதற்கென மணமக்கள் வீட்டார் தங்களது குடும்பத் திருமணத்திற்கு அழைப்பிதழ்கள் அச்சடித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் வழங்கி திருமணத்திற்கு அழைப்பார்கள். இந்த பழக்கம் தொன்று தொட்டு தமிழர்களின் மரபாக விளங்கி வருகிறது. 

அதனை கடைப்பிடிக்கும் விதமாக இன்று சமூக வலைதளங்களில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், மக்களுக்கு நன்மை செய்கின்ற வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மஞ்சள் வண்ணத்தில் திருமண அழைப்பிதழ் போன்று அச்சடித்து, அதில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கி வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து இருந்தது. இதில் காலை 7மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தை முகூர்த்த நேரமாக குறித்து இருந்தது வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்