பிரேமலதா விஜயகாந்த் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

பிரேமலதா விஜயகாந்த் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

Update: 2024-04-16 07:57 GMT

மதுரை,

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறவுள்ளது. வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு ஆகியவை அதற்கான சோதனைகளை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து அவரது தாயாரும், கட்சியின் பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் நேற்று வாக்கு சேகரித்தார்.

இதையடுத்து மதுரை அவனியாபுரம், கைத்தறி நகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்வதற்காக விருதுநகரில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார். மதுரை விமான நிலையம் மண்டேலாநகர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அவரது காரை பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை நடத்த வேண்டும் என கூறினர்.

இதையடுத்து பிரேமலதா விஜயகாந்த் காரில் இருந்து இறங்கினார். அதன்பின், பறக்கும்படை அதிகாரிகள் கார் முழுவதும் சோதனை நடத்தினர். சோதனையில் பணமோ, பொருளோ எதுவும் கிடைக்கவில்லை. முழுமையான சோதனை முடிந்த பின்னர் பிரேமலதா விஜயகாந்த் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்