'அயோத்தியில் திரேதா யுகமும், ராம ராஜ்ஜியமும் திரும்பி வந்துள்ளது' - யோகி ஆதித்யநாத்

திரேதா யுகமும், ராம ராஜ்ஜியமும் திரும்பி வந்ததை அயோத்தி பார்த்துக்கொண்டிருக்கிறது என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-04 14:49 GMT

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் கன்னோஜ் மக்களவை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் சுப்ரத் பதக்கை ஆதரித்து, அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;-

"500 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தியில் கடவுள் ராமர் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார். ராம நவமியின்போது குழந்தை ராமரின் மீது தோன்றிய சூரிய திலகத்தைப் பார்த்து உலகமே வியந்தது. இத்தகைய அற்புதமான நிகழ்வு, கடவுள் ராமரின் இருப்பைக் குறித்து கேள்வி எழுப்பும் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி ஆட்சிக்காலங்களில் நடைபெறவில்லை.

ஒரு காலத்தில் சமாஜ்வாடி கட்சி, அயோத்திக்கு ஒரு பறவை கூட செல்ல முடியாது என்று கூறியது. ஆனால் இன்று பா.ஜ.க. ஆட்சியில் அயோத்திக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து ராமரின் ஆசீர்வாதத்தைப் பெறுகின்றனர். திரேதா யுகமும், ராம ராஜ்ஜியமும் திரும்பி வந்ததை அயோத்தி மக்கள் இன்று பார்த்துக்கொண்டிருக்கின்றனர்."

இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்