சென்னையில் உள்ள பாரம்பரிய கட்டிடங்களின் வயது தெரியுமா?
386-வது சென்னை தினம் இன்று கொண்டாடப்படுகிறது.;
சென்னை தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், சென்னையில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், பாரம்பரிய கட்டிடங்கள் கட்டப்பட்ட ஆண்டு, வயது விவரம் ஆகியவற்றை பார்ப்போம்.
| ஆண்டு | பாரம்பரிய இடங்கள் | வயது |
| 806 | திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் | 1219 |
| 820 | திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில் | 1205 |
| 970 | மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் கோவில் | 1055 |
| 1516 | பிரகாச மாதா ஆலயம் | 509 |
| 1523 | சாந்தோம் தேவாலயம் | 502 |
| 1640 | புனித ஜார்ஜ் கோட்டை (தற்போதைய தலைமைச்செயலகம்). | 385 |
| 1680 | கோட்டையில் உள்ள புனித மேரி தேவாலயம் | 345 |
| 1768 | சேப்பாக்கம் கலச மகால் | 257 |
| 1795 | திருவல்லிக்கேணி வாலாஜா மசூதி | 230 |
| 1819 | சென்னை அரசு கண் ஆஸ்பத்திரி | 206 |
| 1821 | வேப்பேரி புனித ஆண்ட்ரூ தேவாலயம் | 204 |
| 1835 | சென்னை மருத்துவக் கல்லூரி | 190 |
| 1837 | சென்னை மத்திய சிறை | 188 |
| 1842 | முதல் கலங்கரை விளக்கம் | 183 |
| 1846 | பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி | 179 |
| 1851 | எழும்பூர் அரசு அருங்காட்சியகம் | 174 |
| 1856 | ராயபுரம் ரெயில் நிலையம் | 169 |
| 1857 | சென்னை பல்கலைக்கழகம் | 168 |
| 1864 | மாநிலக் கல்லூரி | 161 |
| 1869 | நேப்பியர் பாலம் | 156 |
| 1873 | சென்டிரல் ரெயில் நிலையம் | 152 |
| 1888 | விக்டோரியா ஹால் | 137 |
| 1889 | சென்னை ஐகோர்ட்டு கட்டிடம் | 136 |
| 1890 | விக்டோரியா ஹால் | 135 |
| 1891 | சென்னை சட்டக் கல்லூரி | 134 |
| 1905 | எழும்பூர் ரெயில் நிலையம் | 120 |
| 1909 | ரிப்பன் கட்டிடம் | 116 |
| 1911 | ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி | 114 |
| 1915 | தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகம் | 110 |
| 1925 | லயோலா கல்லூரி | 100 |
| 1928 | அரசு காசநோய் ஆஸ்பத்திரி | 97 |
| 1938 | ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி | 87 |
| 1952 | ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் | 73 |
| 1953 | அரசு பல் மருத்துவ கல்லூரி | 72 |
| 1954 | அடையாறு புற்றுநோய் மையம் | 71 |
| 1956 | காந்தி மண்டபம் | 69 |
| 1959 | கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் எல்.ஐ.சி. கட்டிடம் | 66 |
| 1960 | கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி | 65 |
| 1971 | கிண்டி பாம்பு பண்ணை | 54 |
| 1974 | கிண்டி ராஜாஜி மண்டபம் | 51 |
| 1975 | கிண்டி காமராஜர் மண்டபம் மற்றும் வள்ளுவர் கோட்டம் | 50 |
| 1976 | தற்போதைய கலங்கரை விளக்கம் | 49 |
| 1983 | வண்டலூர் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா | 42 |
| 1988 | பிர்லா கோளரங்கம் | 37 |