சண்டே ஸ்பெஷல்: மோர் குழம்பு செய்வது எப்படி?
பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் இந்த வாரம் மோர் குழம்பு எப்படி செய்வது? என்பதை பார்ப்போம்.;
மோர் குழம்பு வெயில் காலத்திற்கு ஏற்ற குழம்பு. 10 நிமிடங்களில் எளிதாக செய்து முடிக்க முடியும்.
தேவையான பொருட்கள்:-
தயிர் - ½ லிட்டர்
துவரம் பருப்பு - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க - வெந்தயம், கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை
செய்முறை
முதலில் தயிரை மத்து வைத்து நன்றாக கலக்கிக்கொள்ளவும். தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டாம். பிறகு ஒரு மிக்சி ஜாரில் ஊறவைத்த துவரம் பருப்பு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து கொஞ்சம் தண்ணீர்விட்டு மையாக அரைக்கவும். இதை கரைத்து வைத்துள்ள தயிருடன் சேர்த்து கலந்துவிடவும். தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாய் ஒன்று வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவுக்கு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் நன்கு சூடேறியவுடன் சின்ன வெங்காயம், வெந்தயம், கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பின்னர், மஞ்சள் தூள், பெருங்காய தூள் கொஞ்சம் சேர்க்கவும்.
அதன்பின்பு, தயாராக வைத்திருக்கும் தயிர் கலவையை இதில் ஊற்றவும். தயிர் கெட்டியாக இருந்தால், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். பச்சை வாடை மறைந்தவுடன் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும். சுவையான மோர் குழம்பு ரெடி.