ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த அர்ஷ்தீப் சிங்

இன்று நடைபெறும் முதலாவது தகுதி சுற்றில் பஞ்சாப் கிங்ஸ், பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.;

Update:2025-05-29 18:51 IST

முல்லாப்பூர்,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதன்படி லீக் சுற்றுகள் நேற்று முன்தினம் முடிந்தது. லீக் சுற்று முடிவில் பஞ்சாப் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.டெல்லி கேப்பிட்டல்ஸ், முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ், 5 முறை சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் 5 முதல் 10 இடங்களை பெற்று லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த போட்டி தொடரில் நேற்று ஓய்வு நாளாகும்.இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ், 2-வது இடம் பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு உண்டு. தோல்வி காணும் அணி, வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோதும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

இந்நிலையில் பஞ்சாப் அணி இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், அந்த அணிக்கு அதிக ஆதரவு கிடைக்கவில்லை என்று ஒரு ரசிகரின் ஸ்னாப்சாட் செய்திக்கு அர்ஷ்தீப் பதிலளித்துள்ளார். மேலும் அனைவரும் தங்களை ஆதரிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.இது குறித்து அவர் கூறியதாவது,

எங்களை ஆதரித்ததற்கு நன்றி. நீங்கள் பஞ்சாபி இல்லை. ஆனால் நீங்கள் இன்னும் பஞ்சாபை ஆதரிக்கிறீர்கள். அதே நேரத்தில் பஞ்சாபை ஆதரிக்காத மற்றும் பல்வேறு விருப்பமான அணிகளைக் கொண்ட பல பஞ்சாப் மக்கள் உள்ளனர். பஞ்சாப், அவர்களின் மாநிலம், அவர்களின் அணியை ஆதரிக்கவும், நாங்கள் வெற்றி பெறுவதைக் காண அதிக எண்ணிக்கையில் வரவும் நான் அவர்களை வலியுறுத்துகிறேன் என்று அர்ஷ்தீப் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்