இந்தியாவுக்கு எதிரான தோல்வி: பாகிஸ்தானை கிண்டலடித்த முன்னாள் வீரர்

ஹாங்காங் சிக்ஸ் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது.;

Update:2025-11-08 10:58 IST

image courtesy:twitter/@PKpanchal09

மும்பை,

ஹாங்காங் சிக்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டி அங்குள்ள மோங்காக் நகரில் நேற்று தொடங்கியது. 6 ஓவர்கள் கொண்ட இந்த போட்டியில் ஒரு அணியில் 6 வீரர்கள் அங்கம் வகிப்பார்கள். இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானுடன் மோதியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராபின் உத்தப்பா 28 ரன்கள் அடித்தார்.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது. மழை காரணமாக ஆட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டதால் டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியா வெற்றி பெற்றதால் பாகிஸ்தானை கிண்டலடிக்கும் விதமாக இந்திய முன்னாள் வீரரான பிரியங்க் பஞ்சால் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘வழக்கம் போல பாகிஸ்தான் தோற்கடிக்கப்பட்டது’ என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்