ஐபிஎல் வரலாற்றில் 3-வது அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட கிரீன்.!

கேமரூன் கிரீனை ஏலத்தில் எடுக்க சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.;

Update:2025-12-16 15:12 IST

அபுதாபி,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அபுதாபியில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் 240 இந்தியர், 110 வெளிநாட்டவர் என மொத்தம் 350 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரராக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் விளங்கினார்.

இந்த நிலையில், ஏலத்தில் கேமரூன் கிரினின் பெயர் வந்தபோது, அவரை வாங்க பல அணிகள் போட்டியிட்டன. குறிப்பாக, சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்தது. ஏலத்தில் அவரை வாங்க சென்னை அணி ரூ.25 கோடி வரை சென்றது. ஆனால் இறுதியில், கேமரூன் கிரீனை 25.20 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்துள்ளது. இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் 3-வது அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராக கேமரூன் கிரீன் திகழ்கிறார்.

இதற்கு முன்னதாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கும், ஸ்ரேயஸ் ஐயர் ரூ.26.75 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களாக முதல் இரு இடங்களை பிடித்துள்ளனர். ஐபிஎல் மினி ஏலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டேவிட் மில்லரை டெல்லி அணியால் ரூ.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், பிரேசர் மெக் கெர்க் மற்றும் டிவோன் கான்வே ஆகியோரை எந்த அணியில் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags:    

மேலும் செய்திகள்