ஐசிசி சிறந்த வீராங்கனை விருதுக்கு ஷபாலி தேர்வு

இந்திய பெண்கள் அணியின் அதிரடி பேட்டர் ஷபாலி வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.;

Update:2025-12-16 07:15 IST

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சிறந்த வீரர், வீராங்கனைகளை மாதந்தோறும் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. கடந்த மாதத்துக்கான (நவம்பர்) சிறந்த வீராங்கனையாக இந்திய பெண்கள் அணியின் அதிரடி பேட்டர் ஷபாலி வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் நவிமும்பையில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி 52 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அந்த ஆட்டத்தில் 87 ரன்கள் குவித்ததுடன் 2 விக்கெட்டும் வீழ்த்தி அணியின் வெற்றியில் ஷபாலி வர்மா முக்கிய பங்கு வகித்தார். அவரது இந்த அபார ஆட்டம் திபட்சா புத்தாவோங் (தாய்லாந்து), இஷா ஓஜா (ஐக்கிய அரபு அமீரகம்) ஆகியோரை பின்னுக்கு தள்ளி விருதை வெல்ல வழிவகுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்