நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய முன்னணி வீரர் விலகல்
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
இந்தியா-நியூசிலாந்து அணிகள் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலையில் உள்ளது.
இதற்கிடையே, முதல் ஒருநாள் போட்டியின்போது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் காயமடைந்தார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில், காயம் குணம் அடையாததால் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்தும் வாஷிங்டன் சுந்தர் விலகி உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது.