கேஎல் ராகுல் அசத்தல் சதம்...இந்திய அணி 284 ரன்கள் குவிப்பு

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்தது;

Update:2026-01-14 17:12 IST

ராஜ்கோட்,

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் வதோதராவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணி பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, கில் களமிறங்கினர். தொடக்கத்தில் ரோகித் சர்மா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த விராட் கோலி 23 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் கில் நிலைத்து ஆடினார். அவர் அரைசதமடித்து 56 ரன்களில் வெளியேறினார்.

தொடர்ந்து ஷ்ரேயாஸ் அய்யர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கேஎல் ராகுல் அதிரடியாக விளையாடினார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அரைசதம் கடந்தார். அரைசதம் கடந்த பிறகு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய கேஎல் ராகுல் சதமடித்து அசத்தினார்.

இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்தது. கேஎல் ராகுல் 112 ரன்கள் எடுத்தார்நியூசிலாந்து அணியில் கிறிஸ்டன் கிளார்க் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்