இந்திய வீரர் அதர்வா டைடேவை ரூ.30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி
இந்திய வீரரான கருண் நாயரை ரூ.50 லட்சத்திற்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஏலத்தில் வாங்கியுள்ளது.
ரூ. 3 கோடிக்கு உள்ளூர் வீரரான ரகுவன்ஷியை மீண்டும் கொல்கத்தா அணி ஏலத்தில் வாங்கியுள்ளது.
உள்ளூர் வீரரான நேஹால் வதேராவை ரூ. 4.20 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஜம்பா ரூ. 2.4 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணியின் முன்னணி வீரரான வனிந்து ஹசரங்காவை ரூ. 5.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் ஏலத்தில் வாங்கியுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான நூர் அகமதுவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 10 கோடிக்கு வாங்கியுள்ளது.
சென்னை அணியின் முன்னாள் வீரரான தீக்ஷனாவை ரூ. 4.4 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியுள்ளது.
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளரான டிரெண்ட் பவுல்ட் ரூ.12.5 கோடிக்கு மும்பை அணியால் வாங்கப்பட்டுள்ளார். இவர் முந்தைய சீசன்களில் மும்பை அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சரை ரூ. 12.5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியுள்ளது.